பிப்ரவரி 1, 2018: பொருளாதாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் இந்த வருட (2017)-க்கான பொருளாதார ஆய்வு (Economic Survey) விவசாய பிரச்சனைகளும் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்வுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் பலவீனமான பிரிவுகளில் ஒன்று விவசாயம். இது மக்கள்தொகையில் 49சதவிகிதம் வரை வேலை வாய்ப்பை வழங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்து வருகிறது, இப்பொழுது 16 சதவிகிதமாக உள்ளது.
பருவ நிலை விவசாயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாறுபாடு மற்றும் சந்தை ஏற்றத்தாழ்வு ஆகிய இரண்டும் விவசாயிகளின் வருமானத்தைப் பாதிக்கின்றன. உண்மையில் ‘பொருளாதார கணக்கெடுப்பு ஆய்வறிக்கை’ ஒரு வருடத்தில் 4 சதவிகிதத்திற்கும் மேலாக விவசாய வருவாயைக் குறைக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது. கடுமையான மழையின் காரணமாக வருமானம் 13.7% மற்றும் ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப் பட்டம் ஆகியவற்றிலிருந்து 5.5%- ஆக குறைக்கப்படுகிறது. சந்தை மற்றும் வருவாய் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு இரண்டிற்கும் என்ன செய்ய முடியும்?
வேளாண்மையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ‘பொருளாதார கணக்கெடுப்பு ஆய்வு’ சுட்டிக்காட்டுகிறது. நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை மேம்படுத்த, தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அதிக விலைகளைக் கேட்கிறார்கள். இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான கொள்முதல் C2+ 50% விலையை வழங்க பேராசிரியர் சுவாமிநாதன் ஆணைக்குழு பரிந்துரைத்த சரத்துக்களை அமல்படுத்த விரும்புகிறார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் தங்கள் நிகர வருவாயை இரட்டிப்பாக்க உதவும் திட்டங்களை நம் பிரதமர் செயல்படுத்த இருக்கிறார்.
மேற்கூறப்பட்ட சவால்களுக்கு இந்த பட்ஜெட் எவ்வாறு பிரதிபலிக்கிறது?
1. பருவ நிலை மாற்றம்
இந்த பட்ஜெட் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது. ஆனால் விவசாயாம் சம்பந்தமாக பருவநிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் உள்ளது. காலநிலை அபாய மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களை பிளாக் (வட்டாரம்) அளவில் அமைப்பது முக்கியம். இத்தகைய மையங்கள் பயிற்சி பெற்ற பருவநிலை இடர் முகமையாளர்களால் நடத்தப்பட வேண்டும், ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்திலிருந்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இதில் பயிற்சி பெற்ற முகமையாளர்களாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றமானது ஒரு மிகப்பெரிய பேரழிவாக மாறும். ஆகவே தேவையான உடனடி நடவடிக்கைகளை தணிக்கை மற்றும் தழுவலை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டியது முக்கியம். இதற்கு உடனடியாக திட்டங்களை தீட்ட வேண்டியது அவசியம்.
2. விலை மற்றும் கொள்முதல் முக்கிய பிரச்சனைகளாக மாறிவிட்டன
இங்கு, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்தும் குறைந்த வருவாயில் துயரப்படும் விவசாயிகள் அனைவரையும் தனிமைப்படுத்திவிட்டன. நிதி அமைச்சர் வெளியிட்ட கொள்கையின் படி, கோடைப்பருவத்தில் பயிரிடும் அறிவிக்கப்படாத பயிர்களின் உற்பத்தி செலவுகளில் ஒன்றரை மடங்கை குறைந்தபட்ச விலையாக (MSP) நிர்ணயித்ததை அரசு அறிதுள்ளது. விலை MSP-க்கும் குறைவானதாக இருந்தால் அந்த விஷயத்தில் அரசு முன்வந்து MSP-யிலோ அல்லது வேறு சில வழிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு MSP விலையை வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாயவிலை விட வருமானம் குறைவாக இருந்தால், விவசாயிகள் உற்பத்தி செய்த உபரி உற்பத்தியை வாங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.
உணவுக்கிடங்குகளை உருவாக்குவதற்கு அதிக ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்து அதன் மூலம் 22,000 கிராம சந்தைகளையும், கிராமின் விவசாய விற்பனை நிலையங்களை அமைப்பதாகக் கூறியுள்ளது.
இயற்கை விவசாயத்தின் மூலம் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க பலவழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி ‘ஆப்பரேஷன் க்ரீன்’ எனக் கூறி 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் ஒரு வரவேற்கத்தக்க அம்சம் வேளாண் விவசாய அட்டையைப் போல மீன்வளத்துறைக்கும் கால்நடை வளர்ப்புத் துறையையும் ஒன்றிணைத்து அட்டைகள் வழங்க இருப்பது. மூங்கில் வளர்ப்பு, உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தேசிய மூங்கில் திட்டத்தை மாற்றி மறுசீரமைக்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டுறவு மற்றும் சிறிய அளவிலான தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆதரிப்பது வரவேற்கத்தக்கது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் அதை ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகபட்சம் கவனம் செலுத்தி வேலை வாய்ப்பை பெருக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டவும் அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது. மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு 10,000 கோடி ஒதுக்கியுள்ளதாக நிதிஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேளாண் வளர்ச்சி வேலை வாய்ப்பைப் பெருக்கி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைய, விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறையை ஊக்குவிப்பதற்காக அதிகபட்சமாக இதில் கவனம் செலுத்தியுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க விவசாயம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் இம்மூன்றும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆகமொத்தம் இந்த நிதிநிலை அறிக்கை விவசாயத்தில் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பரிந்துரைகளைக் கொண்டுள்ளன.