இன்று அமைச்சரவையில் விவசாயிகளின் பொருளாதார பிரச்சனைகளை அங்கீகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாக்களை அறிவித்துள்ளது.
விவசாய அமைப்புகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணி, விவசாயிகள் தற்கொலைகள் மீண்டும் நிகழ்வது விவசாயத்தின் பொருளாதார நிலை ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. விவசாய இயக்கங்களின் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் கடன் தள்ளுபடி மற்றும் வருமானம் பெறுவதற்கான விலைகள் ஆகும்.
விவசாயத்தில் வருமானம் மற்றும் லாபத்தன்மையை நிர்ணயிக்க பருவமழை மற்றும் சந்தை நிலை இவ்விரண்டும் முக்கிய காரணிகளாகப் பங்கு வகிக்கின்றன. பயிர் காப்பீட்டை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் திருப்திகரமாக இல்லாததோடு, அதிக விலை மற்றும் கடன் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைக்கு அதிக இடர்பாடுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.
விவசாயிகளுக்கு சந்தை ஆதரவு தேவை என்பதால், அந்தக் கொள்கை மூன்று ஒருங்கிணைந்த கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
1. குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது C2 + 50%
2. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை உறுதி செய்ய சாதகமான கொள்முதல் கொள்கையை கொண்டு வரவேண்டும்
3. உணவுப் பாதுகாப்பு சட்டம், பள்ளி மதிய உணவுத் திட்டம் முதலியன திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும்
இன்று வெளியிட்ட அறிவிப்பு பின்வரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையானது முழுமையான விதிமுறைகளில் அதிகமாக உள்ளது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கீழே உள்ளது. உதாரணமாக பொதுவான நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை 1,550 முதல் ரூ. 1750 வரை குவிண்டாலுக்கு உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டின் C2 செலவு (2017-18) மற்றும் விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தால் (CACP- Commissin for Agricultural Costs and Prices) பயன்படுத்தப்படும் உள்ளீட்டுச் செலவு குறியீட்டின் அடிப்படையில் 3.6 சதவிகிதம் அதிகரித்து, இந்த ஆண்டு (2018-19) செலவானது ரூ. 1,524 ஆகும். எனவே, புதிய குறைந்த பட்ச ஆதரவு விலை C2+15%, C2+50% அல்ல. ராகியின் விஷயத்தில் புதிய குறைந்தபட்ச ஆதரவு விலை C2+20% ஆகும். இதே போல் பாசிப்பயருக்கு, 5,500 ரூபாய் முதல் ரூ 75 வரை, இது இப்போது C2+19% ஆகும்.
அதிக பட்ச எம்.எஸ்.பி-க்கள் (குறைந்தபட்ச ஆதரவு விலை) வரவேற்கப்படுகின்றன. ஆனால் கோதுமை, அரிசி ஆகியவற்றில் தவிர்த்து, மசோதாவில் பொதுமக்களின் கொள்முதல் எம்.எஸ்.பி. (குறைந்தபட்ச ஆதரவு விலை) போதுமானதாக இல்லை.கொள்முதல் எதிர்பார்ப்பில் அதிக பருப்புகளை பயிரிட்ட விவசாயிகளின் அனுபவத்தில் இருந்து இது தெளிவாகிறது. ஆனால் சந்தை விலைகளில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உண்மையில் பல பயிர்களுக்கு உளுந்து, மைதா, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், கடுகு, எண்ணெய் வித்து பயிரான (Rapeseed) ஆகியவை பருவமழைக்கு முந்தைய சராசரி மார்க்கெட்டின் விலையானது அதனுடன் தொடர்புடைய குறைந்த பட்ச ஆதரவு விலைக்குக் கீழே இருந்தது.
விவசாயிகளுக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்யப்பட்ட பிற நடவடிக்கைகளும், வருவாய் நிலைத்தன்மையும், மொத்த வருமானமும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றூச்சூழல்- அழிவு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
மொத்தமாக, அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிப்பது, விவசாய நெருக்கடியை மீறுவதற்கான செயல்முறையின் முதல் படியாகும். குறிப்பாக கொள்முதல் மற்றும் சேமிப்பகத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டபடி இதில் மேலும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.